இப்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படமும் அதில் சிவில் இன்ஜீனியராகத்தான் வேலை பார்ப்பேன் என பிடிவாதமாக நிற்கும் தனுஷின் கதாபாத்திரமும் தான் மாஸ் ஹிட்.. அந்த ஈரம் காய்வதற்குள் இன்னொரு ‘பொறியாளன்’ மீண்டும் உருவாக்கி வேலைக்காக (ரிலீஸுக்காக) காத்திருக்கிறான்.
ஆம். இன்னொரு சிவில் இன்ஜினியரை பற்றிய கதை தான் பொறியாளன் படமாக உருவாக்கி இருக்கிறது. ‘அரிது அரிது’ உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்துள்ளார்.
‘உதயம் என்.ஹெச்-4’ படத்தின் இயக்குனர் மணிமாறன் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை எம்.எஸ்.ஜோன்ஸ். இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் புதுமுகம் தாணுகுமார்.
ஏஸ் மாஸ் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போன வெற்றிமாறன் தனது ‘கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி’ மூலமாக இந்தப்படத்தை வெளியிட முடிவு செய்து தத்தெடுத்தார்.. வெற்றிமாறனே இந்தப்படத்தை வெளியிட முன்வந்ததை கண்ட வேந்தர் மூவிஸ் தற்போது அவரிடமிருந்து இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.