பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்…!

தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயார் சீதாலட்சுமி (28/02/2019) இன்று மாலை 6 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 87. கடந்த சில தினங்களாக இவர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் உடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை சீதா லட்சுமி. எங்க வீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை, தாய் மேல் ஆணை, அன்புக்கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்தக்கண்ணீர், ரஜினிகாந்துடன் அன்புக்கு நான் அடிமை, தனுஷுடன் சீடன், ஹிந்தியில் திலிப் குமாருடன் இரும்புத்திரை உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்தவர் தான் இந்த சீதாலட்சுமி.

பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயம். மேலும் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ளார். திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி, கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர். தந்தை பெரியார் விருது பெற்ற பெருமைக்குரியவர்.

"ரத்தக்கண்ணீர்"அன்னமிட்ட கைஅன்புக்கரங்கள்அன்புக்கு நான் அடிமைஆண்டவன் கட்டளைஎங்க வீட்டு பிள்ளைஎம்ஜிஆர்கர்ணன்சிவாஜிசீடன்சீதாலட்சுமிதனுஷ்தாய் மேல் ஆணைதிலிப் குமார்நம்பியார்புரட்சித்தலைவி ஜெயலலிதாரஜினிகாந்த்ராதிகாவீரபாண்டிய கட்டபொம்மன்