5௦-1௦௦வது படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டான வெங்கட் பிரபு…!

இயக்குனர் வெங்கட் பிரபு 5௦ நாட்கள், 1௦௦ நாட்கள் ஓடும் படங்களை எடுப்பதில் மட்டுமல்ல, நடிகர்கள் மற்றும் பிரபல டெக்னீசியன்களின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்களான 5௦வது மற்றும் 1௦௦வது படங்களை இயக்கும் சாதனையையும் சத்தமில்லாமல் செய்துவருகிறார்

இவர் இயக்கிய ‘மங்காத்தா’ அஜித்தின் 5௦வது படமாக அமைந்தது. ‘பிரியாணி’ படம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஸ்டண்ட் சில்வாவுக்கும் 1௦௦வது படமாக அமைந்தது. இப்போது வெங்கட் இயக்கியுள்ள ‘மாஸ்’ படம் கூட எடிட்டர் பிரவீணின் 1௦௦வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் தனது டெக்னீசியன்களின் லேண்ட்மார்க் டைரக்டராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் வெங்கட் பிரபு.

அஜித்பிரியாணிமங்காத்தாமாஸ்யுவன்சங்கர் ராஜாவெங்கட் பிரபு