கிட்டத்தட்ட காஸ்ட்லியான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் போலத்தான் ஆகிவிட்டது வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் தலைமறைவான விஷயம். சினிமா தயாரித்து அதில் நட்டப்பட்டு இருந்தாலு கூட, மதனுக்கு பிரச்சனையாக இருந்ததும் அவர் தலைமறைவாக காரணமாக இருந்ததும் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்களின் சேர்க்கைக்காக பணம் வாங்கிய விவகாரம் தான் என்கிறார்கள்.
மதனின் உறவினர்கள், வேந்தர் மூவிஸ் நிர்வாகி டி.சிவா ஆகியோர் காசி முழுதும் சல்லடை போட்டு சலித்தும் மதன் கிடைத்தபாடில்ல்லை.. இந்தநிலையில் மதனின் குடும்பத்தார் மதனை கண்டுபிடித்து தரும்படி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்குதல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதனை கண்டுபிடித்து இரண்டு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.