தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார் விமல். தற்போது மன்னர் வகையறாவை முடித்த கையுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் விமல்.
அதனை தொடர்ந்து ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி இயக்கதில் நடிக்கயுள்ளார். இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
நடிகர் விமலின் திரையுல வாழ்க்கையை ‘களவாணி’ மூலம் ‘புதிய பாதைக்கு’ திருப்பிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் களவாணி-2’ படத்தில் மீண்டும் விமல் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் இதில் தொடர்கிறது. நடிகர் மாதவன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை சற்குணம் இயக்குகிறார். அதனை தொடர்ந்து ‘களவாணி-2’ தொடங்க உள்ளதாம்..