கடவுள்-2வை ஆரம்பித்தார் வேலு பிரபாகரன்..!

நல்ல கருத்துள்ள சில படங்களை இயக்கி இருந்தாலும், ஒரு நடிகையின் காதல் கதை என்கிற படத்தை இயக்கியபின் இயக்குனர் வேலு பிரபாகரன் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. கிட்டத்தட்ட அவரை செக்ஸ் படம் எடுப்பதாகவே பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு கூட இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி’ என்கிற படம் வெளியானது..

இதையடுத்து கடவுள்-2 என்கிற படத்தை இயக்கி வருகிறார் வேலு பிரபாகரன்.. 21 வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கிய கடவுள் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாக்கி வருகிறது. வேலு பிரபாகரனின் ஆஸ்தான இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

kadavul 2Velu Prabhakaranகடவுள் 2வேலு பிரபாகரன்