‘வெள்ளைக்கார துரை’யாக மாறும் விக்ரம் பிரபு..!

விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’ படத்திற்கும் அடுத்து வெளியான ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி இருந்தது. ஆனால் தற்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியலோ அனுமார் வால் மாதிரி நீளமாகவே இருக்கிறது.

அதேபோல ‘இவன் வேற மாதிரி’யைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் படத்தின் பெயர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரிமா நம்பி, சிகரம் தொடு, தலப்பாக்கட்டி என வித்தியாசமாகவே இருக்கிறது. இப்போது அந்தப்பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருக்கிறது ‘வெள்ளைக்கார துரை’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இந்தப்படத்தை இயக்குகிறார் எழில்.

இதுதவிர ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம்பிரபு. இந்தப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதில் ‘தலப்பாக்கட்டி’, ‘சிகரம் தொடு’ வளர்ந்து வருகின்றன. அரிமா நம்பி படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Vellaikara ThuraiVikram Prabuஅரிமா நம்பிஇவன் வேற மாதிரிஎழில்கும்கிசிகரம் தொடுதலப்பாக்கட்டிவிக்ரம் பிரபுவெள்ளைக்கார துரை