‘வீர சிவாஜி’ டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்..!

விக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடியாக நடித்துவரும் படம் ‘வீர சிவாஜி’.. பேபி ஷாமிலியாக குழந்தை பருவத்தில் கலக்கிய ஷாமிலி கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்குகிறார்.. இந்தப்படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இந்தப்படத்தின் டீசரை ஏ.ஆர்.முருகாதாசிடம் போட்டுக்காட்டிய படக்குழுவினர், அவரையே டீசரை வெளியிடுமாறு கோரிக்கை வைத்தனர். டீசரை பார்த்த முருகதாஸும் அருமையாக உள்ளது நான் கண்டிப்பாக வெளியிடுகிறேன் என்று கூறி டீசரை வெளியிட்டார். தொடர்ந்து இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற விரைவில் உள்ளது

A R murugadossVeera SivajiVikram Prabhuஏ.ஆர்.முருகதாஸ்வீர சிவாஜி