‘கும்கி’-2 ஆம் பாகம்.? ; ‘வீரசிவாஜி’ விழாவில் விக்ரம் பிரபு சூசகம்,,!

‘வாகா’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் படம் ‘வீரசிவாஜி’.. தனது தாத்தா பெயரிலேயே விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப்படத்தை ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.. குழந்தை நட்சத்திரமாக ஒரு காலத்தில் கலக்கிய பேபி ஷாமிலி, இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்..

விக்ரம் பிரபுவுடன் ரோபோ ஷங்கரும் யோகிபாபுவும் காமெடி கூட்டணி அமைத்துள்ளனர்.. கூடவே நான் கடவுள் ராஜேந்திரனும் இருக்கிறார்.. ஐந்தாவது முறையாக விக்ரம் பிரபுவுடன் இந்தப்படத்திற்காக இசைக்கூட்டணி அமைத்துள்ளார் டி.இமான். பணத்தை மையப்படுத்திய அக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியிருக்கிறது.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.. இந்த விழாவில் பேசிய விக்ரம் பிரபு, “இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் என்னை முதன்முதலாக ‘கும்கி’ படத்தில் படம்பிடித்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.. இமானுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளேன்.. இன்னும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் இந்த டீம் மீண்டும் இணைய இருக்கிறோம்.. அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.. விரைவில் அறிவிப்பு வரலாம்” என்றார்..

இந்த டீம் ஏற்கனவே கும்கியில் இணைந்து கலக்கினார்கள்.. சில மாதங்களாகவே இயக்குனர் பிரபு சாலமன் ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறார் என செய்தி அடிபட்டுவந்த நிலையில் விக்ரம் பிரபு வெளியிட்டுள்ள இந்த சூசக தகவலால் ‘கும்கி’ 2ஆம் பாகம் உறுதி என்றே தெரிகிறது.

D ImmanEditor RubernGaneshlalkudi IllaiyarajaVeera SivajiVikram Prabhu