சரியாக இரவு 12 மணி.. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போல சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படத்திற்கு ‘வேதாளம்’ என பெயர் வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, தீபாவளி வெளியீடு என்பதையும் உரக்க அறிவித்துவிட்டார்கள்.. ஆக இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி தான்.
இதன் பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் 12 மணிக்கு வெளியாவது தெரிந்து பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வாங்க ஜனங்கள் க்யூவில் நிற்பதுபோல, அஜித் ரசிகர்கள் டைட்டிலை பார்த்துவிட்டுத்தான் தூங்குவோம் என கண்களை மூடாமல் ஆன்லைனில் உலாவிகொண்டு இருந்த காட்சியையும் காண முடிந்தது.