இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ படத்துல அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து கடந்த வருடம் ரிலீஸான ‘ஆதலால் காதல் செய்வீர்’ மற்றும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் மூலமா ஓரளவுக்கு பேசப்படுற ஒரு நடிகையா மாறியிருக்கார். இப்போது ‘பட்டய கிளப்பு பாண்டியா’, ‘ஈட்டி’ன்னு ரெண்டு படங்கள்ல நடிச்சிட்டு வர்றார் மனிஷா யாதவ்.
தற்போது தேசியவிருது பெற்ற பட இயக்குனரான சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கவுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் மனிஷா யாதவ்.
‘இந்தப்படத்திற்காக பல நடிகைகளை டெஸ்ட் ஷூட் செய்தும் திருப்தியடையாத சீனு ராமசாமி, மனிஷாவின் நடிப்பை பார்த்து உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
இந்தப்படத்தில் மலைப்பகுதியை சேர்ந்த விவசாயம் பார்க்கும் பெண்ணாக மனிஷா நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தை ஏப்ரலில் துவங்க உள்ளார் சீனுராமசாமி.
இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணுவுக்குத்தான் இன்னும் ஜோடி செட்டாகவில்லை.