‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு’-இது பழமொழி. இதில் உறுமீன் என்ற வார்த்தையை டைட்டிலாக வைத்து ஒரு படம் தயாராகிறது.
‘சூதுகவ்வும்’ படத்தில் நயன்தாராவுக்கு கோயில் கட்டிய, ‘நேரம்’ படத்தில் அடாவடியாக வட்டி வசூலிப்பாரே அந்த வட்டிராஜா சிம்ஹா தான் இந்தப்படத்தில் கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கிறார். கதாநாயகியாக அதிதி நடிக்கிறார்.
படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது. ஒரு ஆக்ஷன், திரில்லர் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்க, அச்சு இசையமைக்கிறார். படத்தை ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்று காபி சினிமாஸ் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப்படத்தின் பூஜை இன்று ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடந்தது. தயாரிப்பாளர் சி.வி.குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொண்டனர்.
கார்த்திக் சுப்பராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். இப்படப்பிடிப்பு மார்ச்-5ஆம் தேதி சென்னையில் தொடங்கி, கோவை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.
92140 132775you can have a amazing weblog here! would you wish to make some invite posts on my weblog? 873652