ஆக்சன் ரூட்டுக்கு மாறுகிறார் வசந்தபாலன்..!


தன் மனதுக்கு எந்த கதையை படமாக்க தோன்றுகிறதோ அதைத்தான் படமாக்கி வந்தார் இயக்குனர் வசந்தபாலன். அவரது முயற்சிக்கு ‘வெயில்’, ‘அங்காடி தெரு’ என இரண்டிலும் நல்ல அங்கீகாரம் கிடைத்தது.. ஆனால் அடுத்தடுத்து வெளியான ‘அரவான்’ மற்றும் ‘காவியத்தலைவன்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறின.

அதனால் தனது பாதையில் இருந்து தற்போது ஆக்சன் ரூட்டிற்கு மாறியுள்ள வசந்தபாலன், அதற்கான அருமையான ஸ்கிரிப்ட்டையும் தயார்செய்து விட்டாராம். இன்னும் நடிகர்கள் மட்டும் தான் யாரென்பது முடிவாகவில்லை. ஏற்கனவே ‘வெயில்’ படத்தில் ஓரளவுக்கு ஆக்சனை தொட்டிருந்த வசந்தபாலன், இந்தப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஏரியாவில் தான் பயணிக்க இருக்கிறாராம்.

Angadi TheruVasanthabalanVeyil