வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக சுய் தாகா – மேட் இன் இந்தியா’ என்கிற படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் , அனுஷ்கா ஷர்மா மம்தா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் சிறிய கிராமங்களில் நடைபெற்றது.அங்கு அவர்கள் தங்குவதற்கு பெரிய அளவிலான ஹோட்டல்கள் கிடையாது. எனவே கிடைத்த சிறிய அளவிலான விருந்தினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
“இந்த படத்தை உருவாக்குவதற்கு மிக அருமையான இடங்களை தேர்வு செய்தனர்.இந்த படத்தின் ட்ரைலர் மக்களுக்கு மிகவும் பிடித்தபடியும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.இதற்க்கு முக்கிய காரணம் சரத் கட்டார்யா மற்றும் மணீஷ் ஷர்மா ஆகியோர் தான் .இந்த மாதிரியான சிறிய நகரப்பகுதிகளில் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது ” என அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
“சிறிய விருந்தினர்கள் தாங்கும் வீடுகளில் வாழ்த்து வந்தது மிகவும் பிடித்தது.அங்குள்ள மக்களும் அவர்களது ஆதரவையும் அன்பரும் எங்களுக்கு அளித்தனர்.இந்த நிகழ்வுகள் எனக்கு மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும் ” என நடிகர் வருண் தெரிவித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 28ல் வெளியாக இருக்கிறது.