ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தமாதிரி அந்தப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பு ரொம்பவே பாராட்டப்பட்டது. போடா போடிக்கு பிறகு வரலட்சுமி நடித்திருக்கும் படம் மதகஜராஜா. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் இந்தப்படமும் நீண்டநாட்களாக ரிலீஸாக முடியாமல் பெட்டிக்குள்ளேயே கிடந்தது. ஒருவழியாக இப்போது விஷாலே படத்தை வாங்கி வெளியிடுவதால் வரலட்சுமி இந்தப்படத்தின்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.
இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கிளாமராக நடித்திருக்கிறார் வரலட்சுமி. “நான் அல்ட்ரா மாடர்ன் பொண்ணு.. மேலும் ரியல் லைஃப்பிலேயே நான் கிளாமரான ஆளு. மதகஜராஜாவுல அட்டகாசம் பண்ற பெண் கேரக்டர். மாடர்ன் பொண்ணா வளர்ந்ததால இந்த வெட்கம், நாணம் எல்லாம் எங்கிட்ட கொஞ்சம் குறைவுதான். சுந்தர்.சி தான் என்னை ஒரு பெண்ணாக மாற்றி நடிக்க வைத்தார்” என்று கூறும் வரலட்சுமி மதகஜராஜா பட ரிலீஸை எதிர்பார்த்துத்தான் வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தாராம். இந்தப்படம் தனது திறமையை வெளிப்படுத்தும் என்கிறார் வரலட்சுமி.