வரலட்சுமியின் புதிய படம் ‘அம்மாயி’..!

‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட பிஸியாகிவிட்டார் வரலட்சுமி சரத்குமார்.. ஆனாலும் செலக்டிவான படங்களில் மட்டுமே ஒப்புக்கொள்ளும் வரலட்சுமிக்கு, காத்திருந்தது போல தேடிவந்தது மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘கசாபா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இதில் பெண் தாதா கேரக்டரில் நடித்துள்ளார் வரலட்சுமி.

இதை தொடர்ந்து சமீபத்தில் பூஜையுடன் துவங்கப்பட்ட ‘அம்மாயி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. அறிமுக இயக்குனர் ஷங்கர் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து இளையராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் மீண்டும் வரலட்சுமியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

AmmayiVaralakshmiVinayஅம்மாயிவரலெக்‌ஷ்மி