பாம்பு பெண்ணாக மாறும் வரலட்சுமி..!

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். “நீயா’. இன்று வரை வெளியாகிவரும் ஹாரர் படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா-2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது .

வெறுமனே பாகம் 2 என்பதற்காக அல்லாமல், கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா-2” என்று பெயர் வைத்துள்ளார்கள்.. விமல் நடித்த ‘எத்தன்’ படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் அவருக்கு . இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தில். 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய இயக்குனரும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட பல இடங்களில் தேடி இறுதியாக பாங்காக்கில் ஒரு ராஜநாகத்தை கண்டுபிடித்தார்களாம். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. தொடர்ந்து, தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 – கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார். திரையுலகில் பலவருடங்கள் தயாரிப்பு துறையில் அனுபவம் பெற்ற இவர் தயாரிக்கும் முதல் படம் இது.

A.ஸ்ரீதர்JaiNeeya 2Varalakshmiகேத்தரின் தெரேசாஜம்போ சினிமாஸ்ஜெய்நீயா-2ராய்லட்சுமிவரலக்‌ஷ்மி