“தனி ஒருவன் தந்த மனக்குறையை ‘வனமகன்’ தீர்த்தது” ; தம்பிராமையா

விஜய் டைரக்சனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வனமகன் படம்.. சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ளார்.. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 50வது படம் என்பது இந்தப்படத்தின் கூடுதல் சிறப்பு. இந்தப்படம் வரும் வெள்ளி (ஜூன்-23) அன்று ரிலீஸாக இருக்கிறது.. இதனையொட்டி ‘வனமகன்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்..

இந்தப்படத்தில் ஜெயம் ரவியின் தந்தையாக நடித்துள்ள தம்பி ராமையா தனது மனக்குறை ஒன்று இந்தப்படத்தில் தீர்ந்தது என கூறினார்.. ‘தனி ஒருவன்’ படத்தில் படம் முழுக்க தம்பிராமையா நடித்திருந்தாலும் கூட ஜெயம் ரவியுடன் இந்து நடிப்பது போன்ற காட்சி ஒன்றுகூட படத்தில் இடம்பெறவில்லை.. ஒரே ஒரு காட்சி எடுக்கப்பட்டதை கூட படத்தின் நீளம் கருதி தூக்கி விட்டார்களாம்..

“என்னப்பா ஜெயம் ரவி கூட ஒரு சீன கூட நடிக்க முடியாம பண்ணிட்டாங்களே என ஒரு மனக்குறை இருந்தது.. ஆனால் இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் படம் முழுதும் வரும் கேரக்டரில் நடித்ததில் அந்தக்குறை தீர்ந்தது” என கூறினார் தம்பிராமையா.

Jayam RaviThambi RamaiyahVanamaganதனி ஒருவன்வனமகன் தம்பிராமையா