சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும் கபாலி படத்தின் ஓட்டம் தடைபடாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ‘கபாலி’ படம் குறித்து விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது..
வைரமுத்து பேசிய அந்த வீடியோவை பார்க்கும்போது, அதில் கபாலி படம் தோல்வி என்றும், படத்தில் கபாலி கோட் அணிவது பற்றி பேசிய வசனத்தை கிண்டலடிப்பது போலவும் பேசியிருந்தார் வைரமுத்து.. இதை அறிந்த ரஜினி ரசிகர்களிடம் இருந்து வைரமுத்துவை நோக்கி கண்டன கணைகள் பாய ஆரம்பித்தன.
நிலைமை சீரியசாவதை உணர்ந்த வைரமுத்து, தான் பேசியது குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.. அந்த விளக்கத்தில், “தான் விழாவில் பேசும்போது கபாலி வெற்றி-தோல்வி பற்றி பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ளவேண்டும் என கூறினேன்.. அப்படி பேசும்போது வெற்றி என்ற வார்த்தை தவறிப்போய் விட்டது.
இதை உணர்ந்து நேற்று சென்னை வந்த ரஜினியிடம் நானே இதுபோன்று நடந்துவிட்டதாக கூறினேன்.. அவரும் பெருந்தன்மையுடன் அதை ஏறுக்கொண்டார். நான் மிகவும் நேசிக்கும் ரஜினியை பற்றி அப்படி சொல்வேனா..? எங்கள் நட்பு பெரியது. தயவுசெய்து யாரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.