சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் தான் ‘தர்மதுரை’.. ஸ்டுடியோ-9 நிறுவனம் தயாரிப்பில் அருள்தாஸ், ராதிகா, சுந்தரபாண்டியன் சௌந்தர்ராஜன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்துக்கு வைரமுத்து தான் பாடல் எழுதுகிறார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது..
தனது சொந்த ஊரான வடுகபட்டிக்கு சென்றிருந்த வைரமுத்து அப்படியே தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கும் ஒரு விசிட் அடித்தார். வைரமுத்து நேரில் வந்ததை பார்த்த படக்குழுவினருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. சீனுராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என பாடல் எழுதி அந்தப்பாடலுக்கு தேசியவிருது வாங்கியவர் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது..