‘வை ராஜா வை’ படத்தில் கொக்கி குமார் ரீ-என்ட்ரி..!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படமான ‘வை ராஜா வை’ வரும் மே-1ஆம் தேதி ரிலீஸ் ஆவதையொட்டி இதன் ஆடியோ ரிலீசை நடத்தியுள்ளார்கள். முதல் படத்தில் அனிருத்தை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா, இந்த முறை யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார். கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்சி ஆகியோருடன விவேக், சதீஷ் மனோபாலா, டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

முதன்முறையாக இயக்குனர் வசந்த், நடிகராக இதில் அறிமுகமாகியுள்ளார். தவிர எஸ்.ஜே.சூர்யா ஆட்டோ ட்ரைவராக நடித்து ஒரு குத்துப்பாட்டுக்கும் ஆடியுள்ளார். இந்தப்படத்திற்கு சும்மா கெஸ்ட் ரோலில் நடிக்கவந்த விவேக், டிஸ்கஷன் ஆரம்பித்தபின்னர் அப்படியே படம் முழுவதும் ட்ராவல் பண்ணும் கதாபாத்திரமாக மாறிவிட்டார்.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என செய்திகள் வந்ததே.. அது உண்மைதான். புதுப்பேட்டை படத்தில் அவர் ஏற்று நடித்த கொக்கி குமார் கதாபாத்திரம் இந்தப்படத்தில் மீண்டும் ரிட்டர்ன் ஆகியிருக்கிறது.

தனது முதல் படம் போலவே இந்தப்படமும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ளாமல் இந்தப்படத்திற்கு வாருங்கள் என்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். காரணம் இது முழுக்க முழுக்க கமர்ஷியல் பார்முலாவில் எடுக்கப்பட்ட படமாம்.

‘வை ராஜா வைஎஸ்.ஜே.சூர்யாசதீஷ் மனோபாலாடேனியல் பாலாஜியுவன் சங்கர் ராஜாவிவேக்