திமிரு படத்திற்கு பின் விஷாலும் வடிவேலும் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘கத்தி சண்டை’. வடிவேலு காமெடியில் ஒரு புதிய பரிமாணம் கண்ட சுராஜ் தான் இயக்குனர் என்பதால் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.. கூடவே சூரியும் இருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தான் ஏன் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறினார் விஷால்.
அதாவது சுராஜ், இந்தப்படத்தின் கதையை விஷாலிடம் சொன்னதும் அதில் வரும் டாக்டர் கதாபாத்திரத்திற்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்தால் மட்டுமே தான் இந்தப்படத்தில் நடிப்பேன் என கூறிவிட்டாராம். காரணம் அந்த கேரக்டருக்கு வடிவேளுவைத்தவிர வேறு யாரும் செட்டாக மாட்டார்கள் என்பது விஷாலின் தீர்மானமான கருத்து.. இதைச்சொல்லித்தான் வடிவேலுவை ஒப்புக்கொள்ள வைத்தாராம் சுராஜ்.
படத்தில் வடிவேலுவுக்கு டாக்டர் வேடம் என சுராஜ் சொன்னதும், நான் ஏற்கனவே நிறைய டாக்டர் வேடங்களில் நடித்திருக்கிறேன்.. இதுவும் டுபாக்கூர் டாக்டர் வேடமா என சுராஜிடம் கேட்டாராம் வடிவேலு.. அதற்கு சுராஜ், இது நல்ல டாக்டர் வேடம் தான்.. ஆனால் செய்கிற வேலையெல்லாம் டுபாக்கூர் போல இருக்கும்” என்றாராம்.