அப்பாடா.. ஒரு வழியாக நீண்ட நாட்கள் கழித்து, ‘எலி’ படத்தின் இசைவெளியீடு மூலமாக மீடியாக்களுக்கு தரிசனம் தந்துவிட்டார் வடிவேலு. இன்னும் கொஞ்ச காலத்துக்கு சோஷியல் மீடியாக்களுக்கு பஞ்ச் தீனி போடும் அளவுக்கு இந்தப்படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் லைன்கள் இருக்கு என்கிறார் படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன்.
வடிவேலுவின் பத்து நிமிட பேச்சும் கலகலப்பாகவும் அதேசமயம் கவனமாகவும் இருந்தது. படத்தை தாண்டிய விஷயங்களை அவர் பேசவேயில்லை. புலி படத்திற்கு போட்டியாக ‘எலி’ என பெயர் வைத்திருக்கிறீர்களா என குறும்புக்கார நிருபர் ஒருவர் கேட்டார்.. வடிவேலா இதிலெல்லாம் சிக்குவார்..?
“அது ஒரு தலைப்பு அவ்வளவு தாண்ணே… ‘புலி’க்கு ‘எலி’ போட்டி கிடையாது. புலி துபாட்டுக்கு ஒரு பக்கம் போகும்.. எலி பாட்டுக்கு இன்னொரு பக்கம் போகும்.. அடுத்த படம் ‘கரப்பான் பூச்சி’ன்னுகூட எடுப்பேன். மத்த ஹீரோக்கள்லாம் சிக்ஸ் பேக் வச்சு நடிப்பாங்க.. நமக்கு சிங்கிள் பேக் தான்” என்று அழகாக எஸ்கேப் ஆனார் வடிவேலு.