வெகு நாட்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த வடிவேலு தனது ரீ-எண்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். படத்தை யுவராஜ் தயாளன் என்பவர் இயக்கினார். நீண்ட நாட்கள் கழித்து வடிவேலுவின் படம் வெளியானதால் வரவேற்பும் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது..
தொடர்ந்து வேறு எந்த ஹீரோவின் படத்திலும் காமெடியனாக நடிக்க விரும்பாத வடிவேலு, மீண்டும் இதே இயக்குனரின் அடுத்த படத்திலும் ஹீரோவாகவே நடிக்கிறார். 1970களில் நடக்கும் கதையை தழுவி எடுக்கப்பட இருக்கிறதாம் இந்தப்படம். டி.இமான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஓஹோ பிக்சர்ஸ் ஜி.ராம்குமார் தயாரிக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.