சம்மர் விருந்துக்கு தயாராகும் ‘வடகறி’..?


‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் ‘வடகறி’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ஜெய், சுவாதி மீண்டு இணைந்து நடிப்பது ஒருபக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் மும்பை கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தின் இசைவெளியீட்டை மார்ச் மாதத்திலும், படத்தை சம்மர் ரிலீஸாகவும் வெளியிட தீர்மானித்துள்ளார்களாம்.

Cloud Nine MoviesDhayanithi AlagiriJaiMeeka EntertainmentPoaraliSaravana RajanSubramaniyapuramSunny LeoneSwathiVada CurryYuvan Shankar Raja
Comments (0)
Add Comment