நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு, ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிப்பது. அதிலும் குறிப்பாக ‘பொல்லாதவன்’ படத்தின்போதே, வெற்றிமாறன் ‘வடசென்னை’ என்கிற கதையை தனுஷிடம் சொல்லியிருந்தார். அதனால் அவர்களது அடுத்த படம் அதுவாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது..
இப்போது தனுஷ் அந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தனுஷுடன் ஏற்கனவே வேல்ராஜ் டைரக்சனில் கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா, இதில் மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். செப்டம்பரில் படப்பிடிப்பை ஆரம்பித்து 2016ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தனுஷ்.