வடசென்னை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது..!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க தேவையான அம்சங்களுடன் களமிறங்கிய ‘வடசென்னை’ படம், முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றதுடன் தற்காலிகமாக நின்றிருந்தது. அதன்பின்னர் தனுஷ் ப.பாண்டி டைரக்சனில் ஒருபுறம், வி.ஐ.பி-2வில் நடிப்பு மறுபுறம் என பிசியாக இருந்ததால் வடசென்னையின் அடுத்தகட்ட படப்பிடிப்பை உடனடியாக துவங்க முடியவில்லை.

இப்போ\து வி.ஐ.பி-2 படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இருக்கிறது.. ப.பாண்டி நாளை மறுநாள் (ஏப்-14) ரிலீஸாக இருக்கிறது.. இந்தநிலையில் ‘வடசென்னை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

DhanushVada ChennaiVetrimaranதனுஷ்வட சென்னைவெற்றி மாறன்