பூஜையுடன் இன்று ‘வட சென்னை’ ஆரம்பம்..!


பொல்லாதவன், ஆடுகளம் வெற்றிப்படங்களை தொடர்ந்து ஐந்து வருடங்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி ‘வட சென்னை’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள் என்பது கடந்த மூன்று வருடங்களாகவே பேச்சில் மட்டும் அடிபட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லையென்றாலும் கூட இருவரும் படத்தயாரிப்பு வேலைகளில் இணைந்து செயல்பட்டு தங்களது நட்பை பலப்படுத்தி வந்தனர்..

சில மாதங்களுக்கு முன் தான் இயக்கிய ‘விசாரணை’ படம் மூலமாக ரசிகர்களை அதிரவைத்த வெற்றிமாறன், இனி ‘வடசென்னை’ படத்தை துவங்குவதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லிவந்தார். இந்த நிலையில் இன்று ‘வட சென்னை’ படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இந்தப்படத்தை தனுஷும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

DhanushVada ChennaiVetri Maranதனுஷ்வட சென்னை