‘வானவராயன் வல்லவராயன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்


‘கழுகு’ கிருஷ்ணா நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப்படத்திற்கான தணிக்கை மும்பையில் நடைபெற்றுளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக மோனல் கஜ்ஜாரும் கிருஷ்ணாவின் தம்பியாக, இரண்டாவது ஹீரோவாக விஜய் டிவி புகழ் மா.கா.பா. ஆனந்தும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சந்தானம் கலக்குகிறார்.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார்  ராஜமோகன். படம் பற்றி இயக்குனர் ராஜமோகனிடம் கேட்டால், “14 முறை தோற்ற கஜினி முகமதுவை மிஞ்சி 30 முறை காதலில் தோற்ற வானவராயன் (கிருஷ்ணா),  யாருமே என்னை காதலிக்கவில்லையே என்று ஏங்கும் வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்), இவர்களின் காமெடி கலாட்டா தான் இந்த படம்” என்கிறார்..

இந்தப்படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் அவர்கள் படத்தின் முழு உரிமையையும் வாங்கி விரைவில் வெளியிடுகிறார்

 

கிருஷ்ணாமா.கா.பா.மோனல் கஜ்ஜாவானவராயன் வல்லவராயன்