“வாழு அல்லது வாழவிடு” – டயர்டான ‘வாலு’..!

              

சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தந்துள்ளது ‘வாலு’ படம்… ஆம்.. போன வருடமே கிறிஸ்துமஸ் ரிலீசாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ திரைப்படத்தை அடுத்ததாக, இந்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்தார்கள்.  அடுத்து மார்ச்-27ல் உறுதியாக ரிலீஸ் ஆகிறது என்கிற வகையில் ஆன்லைனில் போஸ்டர் எல்லாம் வெளியிட, சிம்பு ரசிகர்கள் ரொம்பவே உற்சாகம் ஆனார்கள்..

ஆனால் படத்தின் தணிக்கை முடிவடைந்து ‘U’ சான்றிதழ் வாங்கிவிட்ட நிலையில் தற்போது சில காரணங்களால் அந்த தேதியையும் மாற்றி வைத்துவிட்டார்களாம்.. ஏப்ரலில் மெகா படங்கள் ரிலீசாவதால் அனேகமாக அவருக்கு ரொம்பவே பிடித்த அஜித்தின் பிறந்தநாளான மே-1ஆம் தேதி இறுதியாக, உறுதியாக ‘வாலு’ வெளியாகும் என தெரிகிறது.

“என் வேலை நடிப்பதுடன் நின்று விடுகிறது. அதன் வியாபாரத்திலோ, வினியோகத்திலோ நான் தலையிடுவது இல்லை. ரிலீஸ் பற்றி முடிவுசெய்வது படத்தின் தயாரிப்பாளர்கள் தான்” என்றுதான் சிம்பு ஏற்கனவே கூறியிருக்கிறாரே.. அதையே நாமும் பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

SimbuVaaluஎன் வேலை நடிப்பதுடன் நின்று விடுகிறது. அதன் வியாபாரத்திலோசிம்புவாலுவினியோகத்திலோ நான் தலையிடுவது இல்லை. ரிலீஸ் பற்றி முடிவுசெய்வது படத்தின் தயாரிப்பாளர்கள் தான்