விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘வாலு’ படம் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் என விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இந்த நிலையில் படத்துக்கு தடைக்கோரி மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதுகுறித்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நான் நடிச்சிருக்கிற வாலு’ படத்தை வெளியிடுற உரிமையை கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க அப்பா வாங்கினது உங்களுக்கு தெரியும்.. ஒரு தந்தையா மட்டும் அவரு அந்தப்படத்த ரிலீஸ் பண்ணனும்னு நினைக்கலை.. ஒரு தயாரிப்பாளரா, ஒரு இயக்குனரா அவருக்கு அந்தப்படம் பிடிசிருந்தது.. அதனால வாங்குனாரு..
அதுக்கப்புறமா படத்துக்கு என்னென்ன சிக்கல் இருக்கோ, இதோ இப்ப புதுசா இப்படி ஒரு பிரச்சனை வர்ற வரைக்கும் அதையெல்லாம் ஒவ்வொண்ணா பேசி கிளியர் பண்ணிட்டுத்தான் ஜூலை-17ல் படத்தை ரிலீஸ் பண்றதா முடிவு பண்ணினோம்..
ஒரு நடிகனா நான் என்னோட வேலையை சரியா செஞ்சுட்டு, என்னோட அன்பு ரசிகர்களோட சேர்ந்து நானும் படத்தோட ரிலீஸ ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கேன்.. ஆனா என் பலத்தை தாண்டிய சில காரணங்கள் மற்றும் எனக்கு எதிரான சில மறைமுக சக்திகள் இந்தப்படத்தை வெளியிட விடாம தடுக்குறாங்க..
என்னுடைய ரசிகர்களும் நலம் விரும்பிகளின் வாழ்த்துக்களும் மீடியா சப்போர்ட்டும் தான் எனக்கு இப்போதும் முழு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்காங்க. அந்த நம்பிக்கையோடும் ஏதாவது தெய்வச்செயல் நடந்து குறித்த தேதியில் எப்படியும் படம் ரிலீஸ் ஆகிவிடும் என நம்புகிறேன்”
இவ்வாறு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு..