‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா மற்றும் பவர்ஸ்டார் என அதே கூட்டணி மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘வாலிப ராஜா’. இந்தப்படத்தில் சந்தானம் முக்கியமான கேரக்டரில் டாக்டர் ராஜா என்கிற சைக்யாட்ரிஸ்ட்டாக நடித்திருக்கிறார். படத்தில் இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் நடிக்கிறார்.
கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த சாய் கோகுல் ராம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ரதன். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு அனைவரும் பார்க்கும் வகையிலான ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.