‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பால் சற்று ரிலாக்ஸான மிஸ்கின் தற்போது தனது அடுத்த படமான ‘பிசாசு’வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தை தயாரிப்பவர் இயக்குனர் பாலா. யாருக்காகவும் தங்களது படைப்புகளில் துளிகூட சமரசம் செய்துகொள்ளாத துணிச்சல் தான் இப்போது இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் இணைய வைத்திருக்கிறது.
இந்தப்படத்தில் மிஸ்கின் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். அத்துடன் ‘பாண்டிய நாடு’ படத்தில் அதிரடி வில்லனாக மிரட்டிய ஹரீஷ் உத்தமனை(சிம்மக்கல் ரவியின் தம்பியாக நடித்தவர்) தனது படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் சிறியதுதான் என்றாலும் அற்புதமாக இருக்குமாம். இவரை வைத்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பும் நடத்தி முடித்துவிட்டார் மிஸ்கின்.
ராதாமோகனின் ‘கௌரவம்’ படத்தில் அறிமுகமான இந்த ஹரீஷ் உத்தமன் ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’ படத்திலும் எழு வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார். இதுதவிர ஆர்யாவின் ‘யட்சன்’ படத்திலும் ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்திலும் நடிக்கிறார் இந்த உத்தம(ன்) வில்லன்..