ஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் உத்தரவு மகாராஜா ‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு – உதயா மீண்டும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக சேரா, ஸ்ரீபிரியங்கா, மிஷாகோல் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி, சன் டிவி ஆடம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் உதயா 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சன் டிவி தொகுப்பாளர் ஆடம்ஸ், “விஜய்யின் சர்கார் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள். ஆனால் எங்கள் படத்தின் மீதும் யாராவது கேஸ் (வழக்கு)போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும். எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் கூட, அதுவும் படத்துக்கு ஒரு விளம்பரமாக இருக்கும்.. இதை ஒரு ஆதங்கத்தில் தான் நான் சொல்கிறேன்” என்றார்.
பின்னர் பேசிய பிரபு, ஆடம்ஸ் ரொம்ப நல்ல பையன்.. அவர் ஏதோ ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டார். அதை பெரிதுபடுத்தாதீர்கள்.. அவருக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என கூறினார்..