ஏப்ரல்-2ஆம் தேதி ரிலீஸ் என கமலின் ‘‘உத்தம வில்லனு’க்கு முகூர்த்தம் குறித்து விட்டார்கள் படத்தை வெளியிடும் ஈராஸ் நிறுவனத்தினர்… அதன் நிச்சயதார்த்த பகுதியான இசைவெளியீட்டு விழாவை வரும் மார்ச்-1ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் மிக பிரமாண்டமாக நடத்த விறுவிறுப்பான ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள்.
இந்த விழாவில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் உள்ளிட்டவர்களின் லைவ் பெர்பார்மான்ஸ் இருக்குமாம். இதற்கான பயிற்சிக்காக பெங்களூரில் முகாமிட்டிருக்கிறார் பூஜாகுமார். அதுமட்டுமல்ல, மிகச்சிறந்த ‘ஆட்டக்களரி’ நிகழ்ச்சிதான் இந்த விழாவின் ஹைலைட்டாக இருக்கப்போகிறதாம்.