போன பிறவியில் நீங்கள் யார்..? ; ‘உறுமீன்’ சொல்லும் ஆருடம்..!


ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்கு பேப்பர், டிவி விளம்பரங்கள் எல்லாம் போதாது என்று சில தூக்கம் தொலைத்த இயக்குனர்கள் மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்ததன் விளைவுதான் புலி கேம், மாஸ் கேம், வேதாளம் கேம் என்று டாப்போ டாப் ஹீரோக்களின் படங்களுக்கு கூட படம் ரிலீஸாகும் முன் கேம் ரிலீஸ் பண்ணும சிஸ்டம்.

தற்போது பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் என்கிற நிஜ காதல் ஜோடி நடிக்க, சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கும் ‘உறுமீன்’ படம் வரும் டிச-4ஆம் தேதி திரைக்கு வருகிறது அல்லவா..? இப்போது இந்தப்படத்திற்கும் அப்படியொரு கேம் ஒன்றை உருவாக்கி தயாரித்து அதை ஆர்யா கையால் வெளியிட்டும் இருக்கிறார்கள்.. இது எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் கணிக்கக் கூடிய பிரிடிக்சன் கேம்.

இந்த கேமில் உங்களது பிறந்த தேதி மற்றும் மாதம் ஆகியவற்றை டேட்டாவாக இன்புட் செய்தால் உடனே உங்களது கடந்த காலத்தையும் இது உங்களது எத்தனையாவது ஜென்ம என்பதையும் கூடவே, உங்களது எதிர்காலத்தையும் புட்டுப்புட்டு வைத்து விடுகிறது.. ஒருதடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்..!

AryaBaapi SimhaReshmi MenonShri Thenandal FilmsUrumeen