கணவரை உப்புமூட்டை தூக்கவைத்த அமலாபால்..!

 

புதுவருட கொண்டாட்டத்தை வெளிநாட்டில் தனது காதல் கணவர் விஜய்யுடன் குதூகலமாக கொண்டாடிவிட்டு திரும்பியிருக்கிறார் அமலாபால். இங்கே வந்தபின்னும் கூட அவருக்கு இன்னும் அந்த ஹாலிடே மூட் அமலாபாலை விட்டு போகவில்லை என்றே தெரிகிறது. சமீபத்தில் தனது கணவருடனும் குடும்பத்தினருடனும் கேரளாவில் உள்ள வயநாடு வனப்பகுதியில் ஜாலியாக மலையேற்ற பயிற்சி செய்திருக்கிறார் அமலாபால்.

இவர்களை வழி நடத்திச்சென்றவர் வில்லன் நடிகர் பாபு ஆண்டனி. ஒருகட்டத்தில் களைப்படைந்த அமலாபால், தனது கணவர் ஏ.எல்.விஜய்யை உப்புமூட்டை தூக்க சொல்லி, அவர் முதுகில் தொற்றிக்கொண்டு உற்சாக வலம் வந்திருக்கிறார். மலையாளத்தில் தான் நடித்துள்ள ‘மிலி’ படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அமலாபால்.

அமலாபால்ஏ.எல்.விஜய்பாபு ஆண்டனிமிலி