உதயநிதி தற்போது நடித்துவரும் படம் ‘நிமிர்’.. பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிவரும் இந்தப்படத்தில் மலையாளத்தில் பிரபலமான நமீதா பிரமோத், மற்றும் ஏற்கனவே நமக்கு தெரிந்த பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் இந்தப்படத்துக்கு அவரே வசனம் எழுதுகிறார். கிடாரி’ புகழ் தர்புகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப்படம், மலையாளத்தில் கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் தான் இந்தப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்தப்படத்தின் டைட்டிலை பிரியதர்ஷனின் நண்பரும், மலையாள சூப்பர்ஸ்டாருமான மோகன்லால் அறிவித்தார். இந்தப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது..