ஆனால் இந்தப்பாடல்தான் இந்தப்படத்தின் பிசினஸை தீர்மானித்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா..? உண்மை தான்.. இந்தப்பாடலை ஏதேச்சையாக யூடியூப்பில் பார்த்த உதயநிதி, அதன்பிறகு மதன் கார்க்கி மூலமாக இந்தப்படத்தைப்பற்றி அறிந்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரான சந்திரனும் உதயநிதிக்கு நண்பர்தான்.
படத்தை பார்த்த உதயநிதிக்கு கதையும் அது சொல்லப்பட்ட விதமும் புதிதாக இருக்கவே, உடனே தானே படத்தை வெளியிடுவதாக சொல்லிவிட்டார். இப்போது ரெட்ஜெயண்ட் நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுவதால் இந்தப்படத்தின் வேல்யூவே டோட்டலாக மாறியுள்ளது. படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தபோது, இந்தப்படத்தை வாங்கியது நியாயம் தான் என்பது தெரிகிறது. இந்தப்படம் வரும் 2௦ஆம் தேதி வெளியாகிறது.