“நீதான் இந்தப்படத்தை இயக்குனியா..?” – இயக்குனரை சந்தேகப்பட்ட பாரதிராஜா..!

ஜிகர்தண்டா படத்தில் நடிப்பதற்கு முன்னரே பாபிசிம்ஹா கதாநாயகனாக ஒப்பந்தமான படம் தான் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இவருடன் இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்க, கதாநாயகிகளாக நடித்திருப்பவர்களும் புதுமுகங்களே… சென்னையில் பேச்சிலர்களின் வாழ்க்கை தான் படத்தின் மையக்கரு. மருதுபாண்டியன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு கேம்ப்ளின்-ராஜா என்கிற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் பாக்யராஜும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பாரதிராஜா, “இந்தப்படத்தை என்னை பார்க்கும்படி வந்து அழைத்தபோது, வழக்கம்போலத்தான் இதுவும் இருக்கும் என்று அசால்ட்டாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன்.. ஆனால் படம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.. படம் பார்த்து முடித்ததும் மருதுபாண்டியனிடம் ஏம்ப்பா உண்மையிலேயே நீதான் இந்தப்படத்தை இயக்குனியா என்று சந்தேகத்துடன் கேட்டேன்.. அவ்வளவு அருமையான படம் இது.. மறுநாள் என் உதவி இயக்குனர்களையும் வரச்சொல்லி மீண்டும் ஒருமுறை பார்த்தேன்” என இயக்குனரை பாராட்டினார் பாரதிராஜா.

கே.பாக்யராஜ்கேம்ப்ளின்-ராஜாசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறதுஜிகர்தண்டாபாபிசிம்ஹாபாரதிராஜாமருதுபாண்டியன்