கன்னிராசிக்கு ‘யு’ சான்றிதழ்

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர்..

கன்னிராசிபாண்டியராஜன்முத்துக்குமரன்யோகிபாபுரோபோ சங்கர்வரலட்சுமி சரத்குமார்விமல்ஷகிலா