பத்து வருடங்களாக தமிழ்சினிமாவில் தனது இடத்தை யாருக்கும் விட்டுத்தராமல் எவர்கிரீன் கதாநாயகியாக நடித்துவரும் த்ரிஷா, தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்யவிருக்கிறார். கடந்த ஒரு மாத காலமாகவே த்ரிஷாவின் திருமண விவசாயம் அவர்கள் இருவரின் நண்பர்களிடம் ஹாட் டாபிக்காக இடம்பெற்றிருந்தது.
காதல் திருமணம் தான் என்றாலும் இருவீட்டர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது.. குடும்ப விழாவாக நடைபெற்ற இந்நிகழ்வில் மீடியா சம்பந்தமான யாருக்கும் அனுமதி இல்லை. உறவினர்கள், நண்பர்கள் என நெருங்கிய வட்டாரத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.