துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ படத்தில் டபுள் ஆக்சனில் நடிக்கும் இரண்டு தனுஷ்களில் ஒருவருக்கு ஜோடி த்ரிஷா தான்.. இந்த கேரக்டரை த்ரிஷா விரும்பி கேட்டு வாங்கி நடிக்கிறாராம். காரணம் தனுஷுக்கு ஜோடி என்றாலும் கூட இது நெகடிவ் கதாபாத்திரமாம். கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி டைப்பிலான இந்த கேரக்டரில் புதுவிதமான த்ரிஷா வெளிப்படுவார் என்கிறார்களாம் படக்குழுவினர்
அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் த்ரிஷா. படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ள ஒரு புகைப்படம் இதை உறுதிப்படுத்துகிறது. ‘மாபெரும் அறப்போராட்டம்.. மாணவர்களை அழைக்கிறார் ருத்ரா’ என பொள்ளாச்சியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு எதிராக போராட்டம் நடத்த மாணவர்களை அழைக்கும் வாசகங்களுடன் அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் த்ரிஷாவின் கேரக்டரில் புதுசா ஏதோ இருக்கு என சொல்லவைக்கிறது.