நடிகர் சிவகுமாரை போல த்ரிஷாவுக்கு கிடைத்த சிறப்பு பட்டம்…!

கோலிவுட்டில் 17 வருடங்களை கடந்தும் கூட, தற்போதும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அன்று பார்த்த அதே த்ரிஷா தான் இனறைக்கும் அதே முகப்பொலிவான தோற்றத்துடன் காட்ச்சியளிக்கிறார். வயது கூடிக்கொண்டே போனாலும் முதுமை இவரை எட்டிப்பார்க்க பயப்படுகிறது போலும்..

அதனால் தான் நேற்று நடைபெற்ற ‘மோகினி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் சார்பாக அவருக்கு ‘மாற்கண்டேயி என்கிற படம் வழங்கப்பட்டது.இதற்கு என்றும் இளமையானவர் என பொருள்.. இதுவரை தமிழ் சினிமா நடிகர்களில் சிவகுமாருக்கு மட்டுமே ‘மார்கண்டேயன்’ என அழைக்கப்படும் பெருமை கிடைத்துள்ளது. இப்போது நடிகைகளில் த்ரிஷா அந்த படத்திற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்..

த்ரிஷா நடித்துள்ள ‘மோகினி’ படத்தை ஆர்.மாதேஷ் இயக்கி இருக்கிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் விஜய் நடித்த ‘மதுர’ படத்தை இயக்கியவரும் இவர் தான். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாக்கி உள்ள இந்த படத்தை சிங்கம் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.. கதாநாயகி த்ரிஷாவோடு யோகி பாபு, சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, சாமிநாதன், கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை விவேக் மெர்வின், இவர் ‘புகழ்’ படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு -ஆர்.பி.குருதேவ், படத் தொகுப்பு தினேஷ் பொன்ராஜ் மேற்கொள்கிறார். இப்படம் படம் வரும் 27-ம் தேதி வெளிவர விருக்கும் சூழலில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் இயக்குநர் மாதேஷ் பேசியது :

இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகுகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குநர் மாதேஷ்.

த்ரிஷா பேசியது :-

நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான். தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன், பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம்” என்றார் த்ரிஷா.

ஆர்.பி.குருதேவ்கணேஷ்கவுசல்யாசாமிநாதன்சிங்கம்-2சுகன்யாசுவாமிநாதன்தினேஷ் பொன்ராஜ்த்ரிஷாபாங்காக்பிரின்ஸ் பிக்சர்ஸ்புகழ்மதுரமாதேஷ்மார்கண்டேயன்முகேஷ் திவாரிமோகினியோகி பாபுலட்சுமன்லண்டன்விவேக்-மெர்வின்வைஷ்ணவி