சிம்ரனை சம்மதிக்க வைத்த த்ரிஷாவும் நயன்தாராவும்..!


ரஜினி மற்றும் விக்ரம் இருவருடன் நடிக்கவில்லை என்கிற குறையைத்தவிர சிம்ரனின் திரையுலக பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. திருமணத்துக்குப்பின் அவருக்கு ரீ-என்ட்ரியாக அமைந்த ‘சேவல்’, ‘ஐந்தாம்படை’ ஆகிய படங்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.. ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் அவர் வித்தியாசமாக கொஞ்சம் வில்லத்தனம் காட்டியது பாராட்டுக்களை பெற்றது. தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துவரும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் சிம்ரன்.

இயக்குனர் ஆதிக்கிடம் இந்தப்படத்தின் கதையை கேட்பதற்கு. சிம்ரன் ஒத்துக்கொண்டதே இந்தப்படத்தின் டைட்டில் அவரை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணியதால்தானாம். அதுமட்டுமல்லாமல் ஆதிக்கும் அருமையான கதையை சொல்லி அசத்திவிட, அதில் சிம்ரனுக்கான கதாபாத்திரமும் அவரை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். இந்தப்படத்தில் சிம்ரனுக்கு அல்ட்ரா மாடர்ன் கேரக்டராம்.

Adhik RavichandranNayantharaSimranTrishaஆதிக்ஆஹா கல்யாணம்ஐந்தாம்படைசிம்ரன்சேவல்ஜி.வி.பிரகாஷ்த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா