நிழல் ராமசாமியை சந்தித்த நிஜ ராமசாமி…!

சமூகத்திற்கு எதிரான விஷயங்களுக்கு மக்களுக்கு ஆதரவாக பொது நல வழக்கு தொடர்வதில் பிரபலமான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகிறது.. எஸ்.ஏ.சியின் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சியை வைத்து பலரும் பாராட்டிய நகைச்சுவையான மார்க் என்ற குறும்படத்தை இயக்கியவர்.

இந்தநிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அலுவலகத்திற்குச் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வருகை தந்து சந்திரசேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். அத்தோடு படமாகவுள்ள தன் வாழ்க்கைக் கதையான டிராஃபிக் ராமசாமி படத்தைப் பற்றியும் ஆவலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது இயக்குனர் விஜய்விக்ரமும் உடனிருந்தார்.
Attachments area

SACTraffic Ramasamyஎஸ்.ஏ.சந்திரசேகரன்எஸ்.ஏ.சிராமசாமி