நாளை அட்லீ – ப்ரியா திருமணம்…!

 

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. மேலும் அவரிடமிருந்து வெளியே வந்து தனியாக படம் இயக்கி வெற்றி பெற்ற உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இதை ‘கடந்த வருடம் ‘அவர் இயக்கிய ‘ராஜாராணி’ படத்தின் வெற்றி,கதை கதையாய் சொல்லும்..

ஆனால் இவர் சொல்ல மறந்த கதை ஒன்று இருக்கிறது.. அது சின்னத்திரையிலும் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் நடித்துவரும் நடிகை பிரியாவை, எட்டு வருடங்களாக இவர் காதலித்த கதை. ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்தாரே அவரே தான் இந்த பிரியா..

சமீபத்தில் தான் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நாளை(நவ-9) அட்லீ-ப்ரியா திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருக்கிறது.

இந்த பிஸியான நேரத்திலும் கூட பத்திரிகையாளர்களை சந்தித்த அட்லீ, ப்ரியா இருவரும் ஒவ்வொருவரிடமும் நேரிடையாக பத்திரிகையை வழங்கி தங்களது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அட்லீஅனுஷ்காசிங்கம்நான் மகான் அல்லப்ரியாராஜாராணிஷங்கர்