கடந்த வருட கிறிஸ்துமஸ், இந்த வருட தைப்பொங்கல் என இரண்டு பண்டிகைகளுமே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரள தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக்கொண்டதில் ஒரிஜினல் மலையாளப்பட ரசிகர்களுக்கு வருத்தமே.. காரணம் ஒன்றிரண்டு சின்னப்படங்களை தவிர மலையாள ஸ்டார்களின் படம் எதுவும் கடந்த ஒரு மாதமாக ரிலீசாகவே இல்லை..
இப்போது அந்த குறையை தீர்க்கும் விதமாக இன்று மோகன்லாலின் ‘ரசம்’, மம்முட்டியின் ‘பயர்மேன்’, பிருத்விராஜின் ‘பிக்கெட்-43’, பஹத் பாசிலின் ‘மரியம் முக்கு’ மற்றும் அமலாபாலின் ‘மிலி’ என ஐந்து படங்கள் வெளியாக இருக்கின்றன.. இதில் ஒன்றிரண்டு படங்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகவும் வாய்ப்பு இருக்கிறது.. எப்படி இருந்தாலும் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது என்பது மட்டும் உறுதி.