இதோ அதோ என ஸில் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டாலும் டார்லிங் நாயகன் ஜி.வி.பிரகாஷின் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ மற்றும் ‘டார்லிங் டம்பக்கு’ நாயகன் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ என இரண்டு படங்களுமே வரும் செப்-17ஆம் தேதி வெளியாவது உறுதியாகிவிட்டது..
இரண்டு தரப்புமே ட்ரெய்லரில் பட்டையை கிளப்பியுள்ளதால் இரண்டிற்கும் சம அளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ‘கன்னிப்பையனுங்க சாபம் உன்னை சும்மா விடாது’ என ட்ரெய்லரில் சரவெடி கொளுத்தியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இருவரில் தனது சாய்ஸ் யாரென்று வரும் 17ஆம் தேதி சொல்லித்தானே ஆகவேண்டும்.