விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘துப்பாக்கி முனை’. ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்கிற படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ். இந்த படத்தை இயக்கியுள்ளார்.. ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.
இதில் என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிப்பதாக சொல்லப்படுகிறது. ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியை கவனித்துக் கொள்கின்றனர். இந்தப்படம் வரும் டிச-14ல் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.